முதல் தாள் பாடத்திட்டம்
பிரிவு அ
பகுதி 1
தமிழ் மொழி வரலாறு
முதன்மையான இந்தியமொழிக் குடும்பங்கள் _ இந்திய மொழிகளுக்கிடைய பொது நிலையிலும், சிறப்பாக திராவிட மொழிகளிடையிலும் தமிழ் மொழி பெறும் இடம் – திராவிட மொழிகளின் வகைப்பாடும் அவை பரவியுள்ள தன்மையும்.
சங்ககாலத்தமிழ் – இடைக்காலத்தமிழ் : பல்லவர் காலத் தமிழ் மொழி அமைப்பு மட்டும் – தமிழில் பெயர் ,வினை, பெயரடை, வினையடை, கால இடைநிலைகள் வேற்றுமை உருபுகள் ஆகியவற்றின் போக்கு பற்றிய வரலாற்று நோக்கில் ஆய்வு .
பிற மொழிகளிலிருந்து தமிழில் கடன்பட்ட சொற்கள் ,தமிழ் வழங்கும் சமூக மற்றும் வட்டாரக் கிளை மொழிகள்- பேச்சுத் தமிழுக்கும் இலக்கிய தமிழுக்குமான வேறுபாடு .
பகுதி 2
தமிழ் இலக்கிய வரலாறு
தொல்காப்பியம் – சங்க இலக்கியம் – அகம், புறம் எனும் பாகுபாடு – சங்க இலக்கியத்தின் சமயப் பொதுமைப்போக்கு – அறஇலக்கியங்கள் வளர்ச்சி – சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை.
பகுதி 3
பக்தி இலக்கியம்
(ஆழ்வார்களும் நாயன்மார்களும்) ஆழ்வார் பாடல்களில் நாயகன் நாயகி பாவம் – சிற்றிலக்கிய வடிவங்கள் தூது, உலா, பரணி, குறவஞ்சி.
இக்காலத்தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்கான சமூகக்காரணிகள்: நாவல், சிறுகதை ,புதுகவிதை, புதுமைப்படைப்புகள், ஆக்கத்தில் வேறுபட்ட அரசியல் கருத்தாக்கங்களின் தாக்கம்.
பிரிவு ஆ
பகுதி 1
தமிழியலின் அண்மைக்காலப் போக்குகள்:
திறனாய்வு அணுகுமுறைகள்: சமூகவியல், உளவியல், வரலாற்றியல், மற்றும் அறவியல் – திறனாய்வின் பயன்பாடு- பலவகை இலக்கிய உத்திகள்; உள்ளுறை, இறைச்சி ,தொன்மம் ,ஒட்டுருவகம், அங்கதம், மெய்ப்பாடு, படிமம், குறியீடு, இருண்மை, ஒப்பிலக்கியக் கருத்தாக்கம் -ஒப்பிலக்கியக் கொள்கை .
பகுதி 2
தமிழில் நாட்டுப்புற இலக்கியங்கள் :
கதைப்பாடல்கள், பழமொழிகள் ,விடுகதைகள், சமூகவியல் பார்வையில் நாட்டார் வழக்காற்றில் மொழிபெயர்ப்பின் பயன்கள் – மொழிபெயர்க்கப்பட்டுள்ள தமிழ் இலக்கியங்கள் – தமிழில் இதழில் வளர்ச்சி.
பகுதி 3
தமிழர்களின் பண்பாட்டு வரலாறு:
காதல்,போர் பற்றிய கருத்தாக்கம் – அறக்கோட்பாடுகள்- தொல் தமிழர் போரியில் அறநெறிமுறைகள் -பழக்க வழக்கங்கள்- நம்பிக்கைகள்- சடங்குகள்- ஐந்திணைகள் காட்டும் வழிபாட்டு முறைகள் -சங்கம் மருவிய கால இலக்கியங்களில் புலப்படும் பண்பாட்டு மாற்றங்கள்.
இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகள் (சமணம் மற்றும் பௌத்தம் ) கலை மற்றும் கட்டிடங்கள் ஏற்பட்ட வளர்ச்சி( பல்லவர், பிற்காலச் சோழர்கள், நாயக்கர் காலம்.)
பல்வேறு அரசியல், சமூக சமயப் பண்பாட்டு இயக்கங்கள், தமிழ் சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் – இக்கால தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு மாற்றத்தில் வெகுசன ஊடகங்கள் பெறும் பங்கு.
தமிழ் இரண்டாம் தாள்
பிரிவு அ
பகுதி :1
பழந்தமிழ் இலக்கியம்
பகுதி 2
காப்பியம்: 1. சிலப்பதிகாரம் (மதுரைக் காண்டம் மட்டும்) 2. கம்ப இராமாயணம் (கும்பகர்ணன் வதைப்படலம்)
பகுதி 3
பக்தி இலக்கியம்: 1. திருவாசகம் (நீத்தல் விண்ணப்பம்) 2. திருப்பாவை
பிரிவு ஆ
பகுதி 1
கவிதை
உரைநடை
பகுதி 2
நாவல், சிறுகதை, நாடகம்
பகுதி 3
நாட்டுப்புற இலக்கியம்
Gone are the days when UPSC civil services examination question papers follow compartmentalization approach where mastering separate subjects alone was enough to clear the examination.Today UPSC follows integration approach that test the candidates’ ability to integrate and crosslink all subjects mentioned in the syllabus.